கூடலூரில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு
கூடலூரில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
கூடலூர் நகராட்சியில் பெரும்பான்மையான இடங்களில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. அதேபோல் தினமும் குப்பைக்கழிவுகள் அகற்றப்படுவதில்லை. இந்நிலையில் கூடலூர் அப்பாச்சி பண்ணை அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டிய பகுதிகளில் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு அவை அகற்றப்படாமலேயே உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் நடைபயணம் செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லவேண்டிய அவலநிலை உள்ளது. எனவே உயர் அதிகாரிகள் தலையிட்டு சுற்றுபுறச்சூழலை பாதுகாக்கவும், நோய்களில் இருந்து பொதுமக்களை காப்பாற்றவும் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story