புகையிலை விற்ற 2 பேர் கைது
ஆத்தூரில் புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது தெற்கு ஆத்தூர் சினிமா தியேட்டர் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஆறுமுகநேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சீனிவாசன் என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 60 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த டாஸ்மாக் கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக ஆறுமுகநேரி லட்சுமி மாநகரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story