பழனி அருகே முயல் வேட்டையாட முயன்ற 2 பேருக்கு அபராதம்


பழனி அருகே முயல் வேட்டையாட முயன்ற 2 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 18 Dec 2021 9:17 PM IST (Updated: 18 Dec 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே முயல் வேட்டையாட முயன்ற 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பழனி:
பழனியை அடுத்த பாலாறு-பொருந்தலாறு அணை அருகே உள்ள வனப்பகுதியில் முயல், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்கு வனவிலங்கு வேட்டையை தடுக்க பழனி வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர். அதன்படி நேற்று வனச்சரகர் பழனிக்குமார், வனவர் புவனேஸ்வரன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது பாலசமுத்திரம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் வலையுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அதில், அவர்கள் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த காந்தி (வயது 65), சேலத்தை சேர்ந்த மாரிமுத்து (55) என்பதும், முயல் வேட்டையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து பழனி வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வரும் நாட்களில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட கூடாது என்றும், வனவிலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Next Story