பாரூர் ஏரியில் இருந்து 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


பாரூர் ஏரியில் இருந்து 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 9:29 PM IST (Updated: 18 Dec 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

பாரூர் ஏரியில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்கள் மூலம் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

காவேரிப்பட்டணம்:
தண்ணீர் திறப்பு
போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் மூலம் 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2,397 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், பாரூர் பெரிய ஏரியில் இருந்து 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தேதி வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
6 கிராமங்கள் பயன்
கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள  பாரூர், அரசம்பட்டி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த  நிலங்கள் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்.  அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எந்த காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார். 
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தமூர்த்தி, சண்முகானந்தம், ரஜினிசெல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் பவித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story