கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 18 Dec 2021 9:29 PM IST (Updated: 18 Dec 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி சூளகிரியில் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி:
20 டன் ரேஷன் அரிசி
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, முரளி ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 3.30 மணிக்கு சூளகிரி மேம்பாலம் அருகே நின்ற டாரஸ் லாரியில் சோதனை செய்தனர்.
அதில், 400 மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும், சென்னை சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
பறிமுதல்
இதையடுத்து 20 டன் ரேஷன் அரிசியை, லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சென்னையில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story