அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; டிப்பர் லாரி உரிமையாளர் பலி


அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; டிப்பர் லாரி உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 18 Dec 2021 9:36 PM IST (Updated: 18 Dec 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் டிப்பர் லாரி உரிமையாளர் பலியானார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் டிப்பர் லாரி உரிமையாளர் பலியானார்.

லாரி உரிமையாளர்
கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 41). இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.
நேற்று அதிகாலையில் மாடசாமி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திற்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். 
சர்வீஸ் ரோட்டில் வந்தபோது இவர் மீது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பஸ் டிரைவர் கைது
தகவல் அறிந்ததும் கோவில் பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான மாடசாமிக்கு மகேஸ்வரி (35) என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரை சேர்ந்த லோகிதாசன் மகன் ஸ்டாலின் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story