நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்பட அ.தி.மு.க.வினர் 3 ஆயிரம் பேர் மீது வழக்கு
நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்பட அ.தி.மு.க.வினர் 3 ஆயிரம் பேர் மீது வழக்கு
நாமக்கல்:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் சேகர் எம்.எல்.ஏ. உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் கொரோனா தொற்று பரவும் காலத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடியதாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்பட அ.தி.மு.க.வினர் சுமார் 3 ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story