மழை ஓய்ந்தும், வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் நிரந்தர தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை


மழை ஓய்ந்தும், வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் நிரந்தர தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Dec 2021 10:22 PM IST (Updated: 18 Dec 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

மழை ஓய்ந்தும், வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் நிரந்தர தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை

மோகனூர்:
மோகனூர் அருகே ராசிபாளையம் ஊராட்சியில் மழை ஓய்ந்நும் வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்வழிப்பாதைகள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் ஊராட்சியை சேர்ந்த செல்லப்பன், பாலசுப்ரமணியம், வீராசாமி, ஆர்.எஸ்.செல்லப்பன், காளியண்ணன், தங்கமணி, திருச்செல்வி, நல்லம்மாள் ஆகியோருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் வாழை, தென்னை, கரும்பு, தீவனப்புல் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் நீர்வழிப்பாதை கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இதேபோல் கொமரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து ராசிபாளையம் வரை மற்றொரு நீர்வழிப்பாதை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, மழைநீர் 2 நீர்வழிப்பாதைகள் வழியாக சென்று விவசாயிகளின் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதற்கிடையே போதிய வடிகால் வசதி இல்லாததால் தற்போது மழை ஓய்ந்தபோதும் 6 ஏக்கர் நிலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை, கரும்பு, தென்னை போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகின்றன. 
நிரந்தர தீர்வு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- எங்கள் விளைநிலங்களுக்கு அருகில் 2 நீர்வழிப்பாதைகள் உள்ளன. அவற்றின் தொடர்ச்சியை தணிக்கை செய்து அருகில் உள்ள ஓடைபுறம்போக்கு வரை நீர்வழிப்பாதையை குறியீடு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தோம். 
ஆனால் மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விளை நிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதுடன், வடிகால் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.

Next Story