கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி ஏரி குளங்களில் மீன் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  விதிமுறைகளை மீறி ஏரி குளங்களில் மீன் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி ஏரி குளங்களில் மீன் ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன் குத்தகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் பாசன ஏரிகள், குளங்கள் மற்றும் இதர சிறு பாசன குட்டைகள் உள்ளன.  இந்த நீர்நிலைகள் ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை மூலம் மீன் குத்தகை விடப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது. 

விதிமுறைகளை மீறி

தமிழக அரசு துறைக்கு சொந்தமான நீர் நிலைகளில் பஞ்சாயத்து தலைவர்கள் அல்லது அவர்களை சார்ந்த தனி நபர்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளை மீறி, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொது ஏலம் விடும் நடைமுறை சில கிராமங்களில் நடைபெற்று வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக பொது ஏலம் விடுபவர் மற்றும் மீன் பிடிப்பவர் ஆகியோர் மீது அபராதம் விதிக்கப்படும். மேலும் மீன்கள், வலைகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறுஅந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story