திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
திருப்பூர்,
திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வழிப்பறி
திருப்பூர் மாநகரில் செல்போன் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தது. இதை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் அனில்குமார் மேற்பார்வையில் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் செல்போன் வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது 28), கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த இமாம் அலி (26) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
2 பேர் கைது
அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு, வழிப்பறி வழக்குகள் உள்ளதாகவும், ஏற்கனவே வழிப்பறி சம்பவங்களில் வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்ட 5 பேரின் கூட்டாளிகள் இவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
----
Related Tags :
Next Story