கணவன்-மனைவி கட்டையால் அடித்து கொலை


கணவன்-மனைவி கட்டையால் அடித்து கொலை
x
தினத்தந்தி 18 Dec 2021 10:36 PM IST (Updated: 18 Dec 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவில் பகுதியில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன்,மனைவி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் கோவில் பகுதியில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன்-மனைவி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
கணவன்-மனைவி
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் 4 ரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான பிச்சைக்காரர்கள் அந்த வழியாக வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமும் பிச்சை எடுத்து கோவிலை சுற்றி உள்ள ரதவீதி பகுதியிலேயே தங்கி இருந்து வருகின்றனர். இந்தநிலையில் ராமேசுவரம் கோவில் ரத வீதியில் பிச்சை எடுத்து வந்த கணவன்-மனைவி ரத்த வெள்ளத்தில் கோவிலுக்கு சொந்தமான மண்டப வளாகத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து ராமேசுவரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோவில்வாசல் பகுதியில் பிச்சை எடுப்பவர்கள் என்பதும், வேல்முருகன்(வயது 52), அவரது மனைவி ராமு(38) என்பதும் தெரியவந்தது. 
தகராறு
இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன் கோவில் கிழக்குவாசல் எதிரே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது உடன் பிச்சை எடுத்த ஒருவருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
பின்னர் கோவில் கிழக்குவாசல் அருகே உள்ள மண்டபத்தில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன்-மனைவி கம்பி மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பிச்சைக்காரர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ராமேசுவரம் கோவில் ரதவீதி, கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை பிடித்து கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் பயமில்லாமல் வந்து செல்ல மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story