கள்ளக் குறிச்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை
கள்ளக் குறிச்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் மாதாந்திர நுகர்வோர் பாதுகாப்பு குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் தனி தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி பேசும்போது கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் மற்றும் பிரதான சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல் குண்டும், குழியுமாக உள்ள பிரதான சாலைகளை உடனடியாக சீரமைத்துதர வேண்டும். நீர் நிலை மற்றும் சாலை ஓரங்களில் மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கோட்டத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் உள்ள விதை நெல் தரம் வாரியாக இருப்பு விவரத்தை அறிவிப்பு பலகையில் தெரிவிக்கவேண்டும் என்றார்.
அதேபோல் சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம் பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் சங்கங்களின் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் சரவணன் கூறினார். கூட்டத்தில் குடிமைப்பொருள் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story