வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்


வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்
x
தினத்தந்தி 18 Dec 2021 11:04 PM IST (Updated: 18 Dec 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ குழுக்கள் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார்.

திருப்புவனம், 
மருத்துவ குழுக்கள் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார்.
15-வது முகாம்
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த பூவந்தி மற்றும் அரசனூர் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் நேற்று பொது சுகாதார துறையின் மூலம் 15-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாமதமாக முதல் தவணை தடுப்பூசி போட வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி போடாதவர்கள் கண்டறியப்பட்டு சிறப்பு முகாம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
 வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி போட வேண்டும். அதேபோல் பணியாளர்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தக்கூடிய காலத்தை குறித்து வைத்துக் கொண்டு மக்களிடம் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். 
தடுப்பூசி
மேலும் தடுப்பூசி முகாமிற்க்கு முதல் நாளே பணியாளர்கள் இதுபோன்ற பணிகளை திட்டமிட்டு செயல்பட்டால் முகாம் நாளன்று பணிகள் எளிதாக இருப்பதுடன் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை விடுபடாமல் இருக்கும்.  ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், மருத்துவ குழுவினருடன் ஒருங்கிணைந்து தங்கள் பகுதிகளில் விடுபட்டவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார். 
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் யோகவதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர்சேதுராமு, டாக்டர் பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயா ஆறுமுகம், செல்வராணி மற்றும் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story