மின்சார சேமிப்பு வாரவிழா


மின்சார சேமிப்பு வாரவிழா
x
தினத்தந்தி 18 Dec 2021 11:18 PM IST (Updated: 18 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் மின்சார சேமிப்பு வாரவிழா நடந்தது.

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின்சார சேமிப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. முன்னதாக திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை செயற் பொறியாளர் வெங்கட்ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி மின்சாரத்தை சேமிக்கவும் மற்றும் மின்சாரத்தை பாதுகாப்பாக கையாள்வது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. பிரச்சாரத்தில் உதவி செயற்பொறியாளர் கணேசன் திருப்பத்தூர் மின் வாரிய அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story