லாரியுடன் 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியுடன் 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 18 Dec 2021 11:40 PM IST (Updated: 18 Dec 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே லாரியுடன் 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி

வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சிறப்பு அதிரடி குழு, பறக்கும்படை போலீசார் வாணியம்பாடி பைபாஸ் சாலை உள்பட பல பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 

நெக்குந்தி டோல்கேட் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக மொத்தம் 31 டன் எடையில் ரேஷன் அரிசி இருந்தது. 

இது தொடர்பாக தர்மபுரியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 25), அக்நல் (20) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 31 டன் ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனர். 

அவர்கள் மீது வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story