கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு


கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு
x
தினத்தந்தி 18 Dec 2021 11:41 PM IST (Updated: 18 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி சத்தியவாணிமுத்து நகரில் 15-வது கொரோனா தடுப்பூசி போடும் மெகா முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். அங்குள்ள அங்கன்வாடி மையம், திட கழிவு மேலாண்மை கிடங்கு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சத்தியவாணிமுத்து நகர் 3-வது தெருவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், சீரான குடி தண்ணீர் வினியோகிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

அதைத்தொடர்ந்து சத்தியவாணிமுத்து நகரையொட்டி உள்ள ரெயில்வே இடத்தில் வசித்து வரும் 120 குடும்பத்தினர் அங்கு வந்து, தாங்கள் நிரந்தரமாக வசிக்க இடம் கேட்டு கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரக்கோணம் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோரை கேட்டுக் கொண்டார். 

ஆய்வின்போது அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், வருவாய் ஆய்வாளர் சுந்தரம், அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், நகராட்சி என்ஜினீயர் ஆசிர்வாதம் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story