சரக்கு ரெயில் தடம் புரண்டது


சரக்கு ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 18 Dec 2021 11:41 PM IST (Updated: 18 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது.

அரக்கோணம்

சென்னைைய அடுத்த திருநின்றவூரில் இருந்து ரேணிகுண்டாவை நோக்கி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 44 காலிப்பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மோசூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது, ரெயிலின் 22-வது பெட்டியின் சக்கரங்கள் திடீெரன தடம்புரண்டன.

இதையறிந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த ெயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டியை 3 மணிநேரம் போராடி சரி செய்தனர்.

அதன் பிறகு அங்கிருந்து சரக்கு ெரயில் புறப்பட்டுச் சென்றது. சரக்கு ரெயில் தடம் புரண்டதால் சென்னைக்கு செல்லும் ரெயில்கள் விரைவு ரெயில் பாதையில் சென்றன.

மேலும் சரக்கு ரெயில் தடம்புரண்ட காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story