டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி


டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2021 12:24 AM IST (Updated: 19 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

கறம்பக்குடி, 
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழ இலந்தா வெட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் ராம்குமார் (வயது 25). அதே கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்குமார் (29). இவர்கள் 2 பேரும் ஆழ்குழாய்கிணறு அமைக்கும் தொழிலாளர்களாக உள்ளனர். தஞ்சாவூரில் இருந்து கறம்பக்குடிக்கு ஆழ்குழாய் போடும் பணிக்காக இரும்பு ராடு உள்ளிட்ட உபகரணங்களை ஏற்றிக்கொண்டு டிராக்டரில் கறம்பக்குடிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். டிராக்டரை சதீஷ்குமார் ஓட்டினார். ராம்குமார் அருகில் அமர்ந்திருந்தார்.
கறம்பக்குடி சுக்கிரன் விடுதி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது டிராக்டர் டிப்பரின் அச்சுமுறிந்தது. இதனால் டிராக்டரும் டிப்பரும் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி ராம்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சதீஷ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story