வெம்பக்கோட்டை அணை மதகுகள் சீரமைக்கப்படுமா?
வெம்பக்கோட்டை அணையில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அணையில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
குடிநீர் ஆதாரம்
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணை விளங்குகிறது. தற்போது பெய்த தொடர்மழையினால் வெம்பக்கோட்டை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நீர்வரத்து தொடர்ந்து இருந்ததால் மதகுகள் வழியாக வைப்பாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. போதிய மழையில்லாததாலும், நீர்வரத்து நின்றதாலும் நேற்றுமுன்தினம் வெம்பக்கோட்டை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
நடவடிக்கை
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வெம்பக்கோட்டை அணை இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி சிவகாசிக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
விஜயகரிசல்குளம், படந்தால், கண்டியாபுரம், கோட்டைப்பட்டி, வல்லம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை நிரம்பியது. இந்தநிலையில் இங்குள்ள சேதடைந்த மதகுகள் வழியாக தண்ணீர் வீணாக வெளிேயறிக் கொண்டு இருக்கிறது. எனவே சேதமடைந்த மதகுகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story