தொழிலாளி கடத்தி கொலை:போலீசாரால் தேடப்பட்ட பெண் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்
குமரியில் தொழிலாளியை கடத்தி கொன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட பெண் உள்பட 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
குளச்சல்,
குமரியில் தொழிலாளியை கடத்தி கொன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட பெண் உள்பட 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
தொழிலாளி கொலை
சுசீந்திரம் அருகே நல்லூர் மறுகால்தலை காலனியை சேர்ந்த அய்யப்பன் மகன் செல்லையா (வயது 22), துப்புரவு தொழிலாளி. இவருக்கும், அஞ்சுகிராமம் மயிலாடி காமராஜர் சாலையை சேர்ந்த மணி மகன் மதுரை வீரனுக்கும் (27) முன்விரோதம் இருந்தது.
இந்தநிலையில் மதுரை வீரனின் வீட்டை செல்லையா தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதுரை வீரன் தன்னுடைய உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து செல்லையாவை கடத்தி கொன்று விட்டு உடலை உப்பளத்தில் வீசினார். இதுதொடர்பாக மதுரை வீரனை குளச்சல் போலீசார் கைது செய்தனர்.
2 பேர் கோர்ட்டில் சரண்
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மதுரை வீரனின் மனைவி பார்வதி, தம்பி சாத்தையா, மைத்துனர் அய்யப்பன், நண்பர் சந்தோஷ் ஆகியோரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மதுரை வீரனின் மனைவி பார்வதி, தம்பி சாத்தையா ஆகிய 2 பேரும் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர். கோர்ட்டில் சரண் அடைந்த அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குளச்சல் போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story