வேன் மோதி இளம்பெண் பலி


வேன் மோதி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 19 Dec 2021 1:14 AM IST (Updated: 19 Dec 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே வேன் மோதி இளம்பெண் பலியானார்.

ஆரல்வாய்மொழி, 
விருதுநகரை சேர்ந்தவர் தமிழ்அரசன். இவர் குமரி மாவட்டம் கணபதிபுரம் அருகே உள்ள தெக்குறிச்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி நாகவள்ளி (வயது 22). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் விருதுநகர் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். ஆரல்வாய்மொழி அருகே விசுவாசபுரம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற வேனை தேடி வருகிறார்கள்.

Next Story