முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்


முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2021 1:22 AM IST (Updated: 19 Dec 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சிக்பள்ளாப்பூர்:

ஆர்.எல்.ஜாலப்பா மரணம்

  சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆர்.எல்.ஜாலப்பா(வயது 96). காங்கிரசை சேர்ந்த இவர், முன்னாள் மத்திய மந்திரி ஆவார். மறைந்த முன்னாள் முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டேவின் மந்திரி சபையில் கூட்டுறவு துறை மந்திரியாகவும் இவர் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா முதல்-மந்திரியாக இருந்தபோது அவரது மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக இருந்தார்.

  உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரின் உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை மற்றும் மந்திரிகள் பலர் அஞ்சலி செலுத்தினர். நேற்று முன்தினம் தொட்டபள்ளாப்பூருக்கு ஜாலப்பாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை முதல் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் என பலரும் ஜாலப்பாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சித்தராமையா அஞ்சலி

  முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும், ஜாலப்பாவின் உடலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இருந்தனர். 

அதை தொடர்ந்து ஜாலப்பா மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஜாலப்பாவின் உடலுக்கு 21 குண்டுகள் முழுங்க அரசு முழு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஜாலப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story