மேல்கோட்டையில் கோவில் கருவறை முன்பு நிர்வாண நடனமாடிய போதை ஆசாமி கைது
மண்டியா அருகே செலுவநாராயணசாமி கோவில் கருவறை முன்பு நிர்வாணமாக நடனமாடிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மண்டியா:
நிர்வாண நடனமாடிய போதை ஆசாமி
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மதுபோதையில் ஒருவர் கோவில் கருவறை பகுதிக்குள் புகுந்தார். பின்னர் அவர், தான் அணிந்த ஆடைகளை கழற்றி எரிந்துவிட்டு நிர்வாணமாக கூச்சலிட்டபடி நடனமாடினார்.
இதைபார்த்து கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள், வாலிபரை வெளியே செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் வாலிபர் நிர்வாணமாக கோவில் கருவறைக்குள் தொடர்ந்து நடனமாடினார். இதையடுத்து கோவில் நிர்வாகிகள், மேல்கோட்டை போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோவில் கருவறையில் நடனமாடிய வாலிபரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
வாலிபர் கைது
ஆனால் அந்த வாலிபர் மீண்டும் கோவில் கருவறை முன்பு நிர்வாணமாக நடனம் ஆடினார். இதையடுத்து போலீசார், வாலிபரை ஆடையை அணிய வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதில் மதுபோதையில் கோவில் கருவறை முன்பு நிர்வாணமாக நடனமாடியவர் மேல்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பதும், ஒரு கட்சியில் இருப்பதும் தெரியவந்தது.
அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கருறையில் புகுந்து வாலிபர் நிர்வாணமாக நடனமாடி கூச்சலிட்டது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Related Tags :
Next Story