கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்


கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Dec 2021 1:27 AM IST (Updated: 19 Dec 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி, 
காரியாபட்டி தாலுகாவின் கிழக்கு பகுதியான சத்திரம்புளியங்குளம், அல்லாளப்பேரி, முடுக்கன்குளம், தேனூர்,எஸ்.மறைக்குளம், சித்தனேந்தல், இலுப்பைகுளம், நெடுங்குளம், கல்யாணிபுரம் உள்பட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் படிப்பதற்கும், வேலைக்கு செல்லவும் தினமும் காரியாபட்டி வந்து செல்கின்றனர்.  காரியாபட்டி -நரிக்குடி சாலையில் காலை நேரத்தில் போக்குவரத்து மிகவும் குறைவாக இருப்பதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் குறித்த நேரங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் எஸ்.மறைக்குளம், முடுக்கன்குளம் அரசு  செல்லவும் போக்குவரத்து குறித்த நேரத்திற்கு இல்லை. மேலும் காரியாபட்டி -நரிக்குடி சாலையில் காலை 7.15 மணிக்கு மேல் காரியாபட்டி கிழக்கு பகுதியிலிருந்து காரியாபட்டி செல்ல பஸ்கள் இல்லை. 
பின்னர் காரியாபட்டிக்கு 8.45 மணிக்கு தான் அரசு பஸ் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் காரியாபட்டி-நரிக்குடி சாலையில் தேனூர் விலக்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஏ.முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் காரியாபட்டி போக்குவரத்து பணிமனை மேலாளர் ஆகியோர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாணவ- மாணவிகளின் கோரிக்கையின்படி காலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று கூறிய பின்பு மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story