மைசூரு உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை, பெண் குட்டியை ஈன்றது


மைசூரு உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை, பெண் குட்டியை ஈன்றது
x
தினத்தந்தி 19 Dec 2021 1:47 AM IST (Updated: 19 Dec 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு மிருகக்காட்சி சாலையில் ஒரு வரிக்குதிரை பெண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த குட்டியை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகிறார்கள்.

மைசூரு:

மைசூரு மிருகக்காட்சி சாலை

  மைசூருவில் உலக பிரசித்திபெற்ற ஜெயசாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்கு பராமரிக்கப்பட்டு வரும் வரிக்குதிரை ஒன்று நேற்று குட்டி ஈன்றது. அந்த வரிக்குதிரை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் வரிக்குதிரை ஆகும்.

  அந்த வரிக்குதிரைக்கு மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர் ‘பிராச்சி’ என பெயரிட்டு இருந்தனர். தற்போது 15 வயதாகும் அந்த வரிக்குதிரை நேற்று பெண் குட்டி ஈன்றது குறிப்பிடத்தக்கது. பிராச்சி-ரிச்சி ஆகிய வரிக்குதிரைகளுக்கு இந்த குட்டி வரிக்குதிரை பிறந்ததாக மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

3-வது குட்டி

  ஏற்கனவே இந்த 2 வரிக்குதிரைகளுக்கும் ஒரு ஆண் குட்டி உள்ளது. இது 2-வது குட்டி ஆகும். தற்போது குட்டி வரிக்குதிரையை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். தற்போது பிறந்துள்ள குட்டியுடன் மைசூரு மிருகக்காட்சி சாலையில் மொத்தம் 3 ஆண் வரிக்குதிரைகள் உள்பட 8 வரிக்குதிரைகள் இருப்பதாக மிருகக்காட்சி சாலை நிர்வாக அதிகாரி குல்கர்னி தெரிவித்தார். 

மேலும் 128 ஆண்டுகால மைசூரு மிருகக்காட்சி சாலை வரலாற்றில் பிறந்த 3-வது வரிக்குதிரை குட்டி இது என்றும் அவர் கூறினார்.

Next Story