மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை


மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2021 3:07 AM IST (Updated: 19 Dec 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

குன்னம்:

மகள் இறந்ததால் வேதனை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பீல்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 46). விவசாயி. இவரது மகள் ஷாலினி. பட்டதாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து செல்வராஜ் மகள் இறந்த துக்கம் தாங்காமல் மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மகள் இறந்த துக்கம் தாங்காமல் நேற்று செல்வராஜ் வயலுக்கு சென்று மதுவில் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் செல்வராஜ் தள்ளாடியபடியே வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் அவர் மயங்கி விழுந்தார்.
சாவு
இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செல்வராஜின் மகன் ஜீவா கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story