சிமெண்டு மூட்டைகள் வாங்கியதில் தகராறு; வாலிபர் கைது
சிமெண்டு மூட்டைகள் வாங்கியது தொடர்பான தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் திருச்சி மெயின்ரோட்டை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி சாந்தி (வயது 45). இவரும், இவரது மகன் அரவிந்தும் வி.கைகாட்டி- ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள கா.அம்பாபூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் தியாகராஜன் நடத்தி வரும் கடையில் கடந்த 14-ந் தேதி 20 மூட்டைகள் சிமெண்டை ரூ. 6,300-க்கு வாங்கியுள்ளனர். அதில் ரூ.6 ஆயிரத்தை தியாகராஜனிடம் சாந்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் மீதமுள்ள பணத்தை செல்போனில் சாந்தியிடம் கேட்டுள்ளார். அது பற்றி பேசுவதற்கு தியாகராஜனின் சிமெண்டு கடைக்கு சாந்தியும், அரவிந்தும் சென்றுள்ளனர். அப்போது தியாகராஜனை அரவிந்த் தகாத வார்த்தையால் திட்டியதையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த தியாகராஜன் மற்றும் சாந்தியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீசில் தியாகராஜன் மற்றும் சாந்தி தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தட்சணாமூா்த்தி இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிந்து அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story