அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க.வினர் 700 பேர் மீது வழக்கு


அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க.வினர் 700 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Dec 2021 3:10 AM IST (Updated: 19 Dec 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை:
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. உள்ளிட்ட 700 பேர் மீது சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story