குற்றாலம் அருவியில் குளிக்க நாளை முதல் அனுமதி


குற்றாலம் அருவியில் குளிக்க நாளை முதல் அனுமதி
x
தினத்தந்தி 19 Dec 2021 4:04 AM IST (Updated: 19 Dec 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் குளிக்க நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், தண்ணீர் குறைவாக விழுகிறது.

தென்காசி,:
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குளிர்ச்சியான சூழலுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து குளுமையான சீசனை அனுபவிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளானமானவர்கள் வந்து செல்வார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், தொற்று பரவல் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தால் குற்றாலம் அருவிக்கரைகளில் சேதமடைந்த தரைத்தளம், தடுப்பு கம்பிகள் போன்றவை சீரமைக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி போன்றவற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சமூக இடைவெளியுடன் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே குளிக்க அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே குற்றாலம் அருவிகளில் நேற்று குறைந்தளவே தண்ணீர் விழுந்தது.

Next Story