குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சுரண்டை:
சுரண்டை அருகே சாம்பவர்வடகரை யாதவர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆனைக்கண்ணு நம்பியார் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள இரட்டைகுளக்கரைக்கு அழைத்து சென்றார். பின்னர் இரவில் ஆனைக்கண்ணு நம்பியார் திரும்பி வராததால், அவரை உறவினர்கள் தேடினர்.
மறுநாள் காலையில் ஆனைக்கண்ணு நம்பியார், இரட்டைக்குளத்தில் பிணமாக மிதந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த ஆனைக்கண்ணு நம்பியாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனைக்கண்ணு நம்பியார், குளத்தில் தவறி விழுந்து மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story