மின் இணைப்பு


மின் இணைப்பு
x
தினத்தந்தி 19 Dec 2021 5:13 PM IST (Updated: 19 Dec 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு

பொங்கலூர், 
பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 .4 .2006ம் ஆண்டு முதல் 31. 3 .2013-ம் ஆண்டு வரை சாதாரண வரிசையில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அந்தந்த பகுதி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு 30 நாள் அறிவிப்பு கடிதம் பெற்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து மின்இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். அதுபோல் 1.4.2013- ஆண்டு முதல் 31 .3.2014 ஆண்டு வரை வரை விவசாய விண்ணப்பம் பதிவு செய்து ரூ.10ஆயிரம் சுய நிதி திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.500 மதிப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ள விண்ணப்பதாரர்கள் மின்னிணைப்பு பெற்றுக்கொள்ளலாம். 
1 .4-.2 014.ம் ஆண்டு  முதல் 31.3.2018 ஆண்டு வரை விவசாய விண்ணப்பம் பதிவு செய்து ரூ.25ஆயிரம் அல்லது ரூ.50ஆயிரம் சுய நிதி திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.500 முன் மதிப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ள விண்ணப்பதாரர்கள் மின்இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் சமீபத்திய தேதியில் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட உரிமைச் சான்று, மின் இணைப்புக் கோரும் கிணற்றின் இருப்பிடத்தை குறிக்கும் வரைபடம் போன்ற ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்கு உட்பட்ட செயற்பொறியாளரை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story