வட்டமலை கரை ஓடை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது
வட்டமலை கரை ஓடை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது
வெள்ளகோவில், உத்தமபாளையம் கிராமத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 1-ந் தேதி முதல் பி.ஏ.பி.கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 18.50 அடி உயர்ந்துள்ளளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 24.75 அடி உயரம் ஆகும். இதனால் வெள்ளகோவில் மற்றும் வட்டமலை கரை அணை சுற்றியுள்ள விவசாய மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்வதால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய மற்றும் குடிநீர் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் நிலை உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து இருப்பதால் பறவைகள் வர தொடங்கியுள்ளன. விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அணையை பார்வையிட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story