தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 100 கடைகளுக்கு ‘சீல்’
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 100 வணிக கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நேற்று ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு சுமார் 11.66 டன் அளவு கொண்ட குட்கா, ஜர்தா, ஹான்ஸ் உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்துக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்களின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு பதியப்பட்டவர்களில் 100 வணிக கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நேற்று ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.
Related Tags :
Next Story