தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 52 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை, புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரும், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 26 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 21 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா, 634 புகையிலைப் பாக்கெட்டுகள், 225 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story