தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்க ஒரு வார சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது


தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்க ஒரு வார சிறப்பு முகாம் இன்று  தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Dec 2021 6:53 PM IST (Updated: 19 Dec 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒருவார சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒருவார சிறப்பு முகாம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு முகாம்
சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டை கொண்டாடும் வகையில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் நல்லாட்சி வார அனுசரிப்பு என்ற தலைப்பின் கீழ் ஒருவாரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில பொதுமக்களுக்கு சேவையை துரிதமாக வழங்கும் வகையில் அந்தந்த மண்டல அலுவலகங்களில் இன்று முதல் வருகிற 25-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
விண்ணப்பிக்கலாம்
இந்த முகாம்களில் 1000 சதுர அடிக்கு உட்பட்ட மனைகளுக்கான காலிமனை வரி, சொத்து வரி நிர்ணயம் செய்தல், சொத்து வரி, குடிநீர் கட்டண வரிவிதிப்பாளர்கள் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் சொத்து வரி விதிப்பில் மண்டல மதிப்பு மாறாமல் தெரு பெயர் திருத்தம், குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் கட்டண விகிதம் மாற்றுதல், 1200 சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு கட்டிடம், திட்ட அனுமதி, அங்கீகரிக்கப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்று வழங்குதல் மற்றும் பிழை திருத்தம் (2018-ம் ஆண்டு முதல் அந்தந்த மண்டல அலுவலகங்கள், 2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பிறப்பு மற்றும் இறப்பு சான்று திருத்தம், கிழக்கு மண்டல அலுவலகம்) ஆகிய சேவைகளை பெறலாம். எனவே அந்தந்த மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட கால அளவுக்குள் விண்ணப்பித்து உடனடி தீர்வு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.

Next Story