தரமற்ற சிமெண்டு தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை


தரமற்ற சிமெண்டு தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2021 8:01 PM IST (Updated: 19 Dec 2021 8:01 PM IST)
t-max-icont-min-icon

தரமற்ற சிமெண்டு தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்:-

தரமற்ற சிமெண்டு தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தரச்சான்று குறியீடு

மத்திய அரசு வெளியிட்டுள்ள சிமெண்டு தரக்கட்டுபாட்டு ஆணையின் கீழ் தரச்சான்று குறியீட்டை பெற்றுள்ள சிமெண்டை மட்டுமே தயார் செய்யவும், வினியோகம் மற்றும் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தரச்சான்று குறியீடு இல்லாத சிமெண்டை உற்பத்தி செய்யவோ, இருப்பில் வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.
தரக்கட்டுபாட்டு குறியீடு இல்லாமல் சிமெண்டு தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 

சிமெண்டு மாதிரிகள்

திருவாருர் மாவட்டம் முமுவதும் உள்ள சிமெண்டு உற்பத்தி, வினியோகம் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களில் எந்தவித முன்னறிவிப்பு இன்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது சிமெண்டு மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பவும், நிர்ணயிக்கப்பட்ட தர ஆய்வின்படி இல்லாத சிமெண்டை பறிமுதல் செய்யவும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 
இதுதொடர்பான உத்தரவை மீறும் நிறுவனங்கள் மற்றும் மொத்த- சில்லறை விற்பனை கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story