இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் 31 பேர் கைது


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் 31 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2021 9:05 PM IST (Updated: 19 Dec 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் 31 பேரை கைது செய்தனர்.

கம்பம்: 

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி கம்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது. இதற்கு நகர தலைவர் அஷார் தலைமை தாங்கினார். அவர்கள் கம்பம்மெட்டு சாலையில் பழைய தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். மாநில செயலாளர் சாதிக் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய 31 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் காமயகவுண்டன்பட்டி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story