பனிப்பொழிவால் முல்லைப்பூ விளைச்சல் பாதிப்பு
வேதாரண்யத்தில் பனிப்பொழிவு காரணமாக முல்லைப்பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் பனிப்பொலிவு காரணமாக முல்லைப்பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முல்லைப்பூ சாகுபடி
நாகை மாவட்டம் வேதாரண்யமத்தை அடுத்த கருப்பம்புலம், நெய்விளக்கு, பண்ணார், ஆதனூர், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் முல்லைப்பூ விளைச்சல் பாதிக்கப்பட்டது. மழை நின்றவுடன் விவசாயிகள் பாதிக்கப்பட்ட செடிகளை பராமரிப்பு செய்து வந்தனர்.
விளைச்சல் பாதிப்பு
இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் தற்போது கடும் பனி பொழிவு நிலவுகிறது. இதனால் முல்லைப்பூ செடிகள் மரத்து இலைகள் உதிர்ந்து வெறும் குச்சிகளாக காணப்படுகிறது. பனி பொழிவால் முல்லைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.1,000-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப்பூவிற்கு நல்ல விலை கிடைத்தும் பனியால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். பனி காலம் முடிந்த பிறகு ஜனவரி முதல் முல்லைப் பூக்கள் அதிமாக பூக்க தொடங்கும் என விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story