ஆற்றுக்குள் விழுந்த தொழிலாளி சாவு


ஆற்றுக்குள் விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 Dec 2021 9:18 PM IST (Updated: 19 Dec 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஆற்றுக்குள் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

வாய்மேடு:
 வாய்மேடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில்  ஆற்றுக்குள் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார். 
ஆற்றுக்குள் விழுந்தார்
வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கு சிதம்பரம்பிள்ளை காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு மகன் குஞ்சிதபாதம் (வயது40). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஆயக்காரன்புலத்துக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 
அப்போது மருதூர் நடேச தேவர் கடை அருகே வந்த போது  பின்னால்  பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், குஞ்சிதபாதம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் குஞ்சிதபாதம், ஆற்றுக்குள் விழுந்து மூழ்கினார்.
சாவு
இதுகுறித்து தகவல் அறிந்த  வாய்மேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குஞ்சிதபாதத்தை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு  சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குஞ்சிதபாதம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்தில் காயம் அடைந்த கார்த்திகேயன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story