அரகண்டநல்லூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
அரகண்டநல்லூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் வீரபாண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அரகண்ட நல்லூர் போலீசார் குறிப்பிட்ட பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளம் கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த சுரேஷ்(வயது 43), வீரபாண்டி, மன்மதன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்கிற கட்ட சுரேஷ்(38) ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சாராயம் மற்றும் ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story