ஊத்தங்கரையில் உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


ஊத்தங்கரையில் உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Dec 2021 9:49 PM IST (Updated: 19 Dec 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரையில் உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஊத்தங்கரை:
உரக்கடைகளில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யும் கடைகள், விலை, இருப்பு பட்டியலை முறையாக பராமரிக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தநிலையில் ஊத்தங்கரையில் வேளாண்மை உதவி இயக்குனர் தாமோதரன், தாசில்தார் தெய்வநாயகி ஆகியோர் உரக்கடைகளுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தனர். 
எச்சரிக்கை
ஆய்வின் போது பழைய இருப்பாக உள்ள பொட்டாஷ், யூரியா உரங்களை பழைய விலைக்கே விற்கவேண்டும் எனவும், புதிய விலைக்கோ, கூடுதல் விலைக்கோ விற்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். 
அவ்வாறு பழைய இருப்பு உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story