உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாடு பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் நேற்று தொடங்கியது. மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் கொடியேற்றினார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் ராஜகோபால் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டு அறிக்கை குறித்து மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன் பேசினார்.
மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போதுமத்தியிலும் ஆளும் பா.ஜ.க. அரசு ஒரு பக்கம் மதவாதத்தை முன்னெடுத்து செல்கின்றனர். மறுபக்கம் அனைத்து தொழில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்கின்றனர். பா.ஜ.க. அரசு முழுமையாக தனியாருக்கு ஆதரவாக செயல்படுவதால்தான் அனைத்து பெரிய முதலாளிகளும் பா.ஜனதாவை ஆதரிக்கின்றனர். பா.ஜ.க.வுக்கு எதிராக பெண்கள், இளைஞர்களை திரட்டுவோம் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
விலை உயர்வு
ஒன்றிய பா.ஜனதா அரசின் கொள்கைகளால் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, வரலாறு காணாத நூல் விலை உயர்வினாலும் திருப்பூர் பின்னலாடை தொழில் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயத் துறையிலும் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் மோசமான கொள்கை காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. எரிபொருள், சாலைக் கட்டணங்கள் உயர்வு உள்ளிட்டவற்றால் கல்வி, மருத்துவம், அலைபேசி கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளன. எனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இன்று திங்கட்கிழமை2 வது நாள் மாநாட்டில் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி கிகலந்து கொண்டு பேசுகிறார்.
Related Tags :
Next Story