ரோகினி யானை ஆனைமலையில் இருந்து திருச்சிக்கு மாற்றம்
ரோகினி யானை ஆனைமலையில் இருந்து திருச்சிக்கு மாற்றம்
பொள்ளாச்சி
வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மறுத்த ரோகினி யானை ஆனைமலையில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரோகினி யானை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோட்டத்தில் முகமது யூசப் (வயது63) என்பவரால் ரோகினி என்னும் பெண் யானை சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்தது. மதுரை ஐகோர்ட்டு கிளையில், யானையை மீட்பதற்கான வழக்கு நடந்தது.
கோர்ட்டு யானையை வனத்துறையிடம் ஒப்படைக்கவும், தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு யானைகள் வளர்ப்பு முகாமில், ரோகினி யானையை வைத்து பராமரிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி வனத்துறை அதிகாரிகள் பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு ரோகினி யானையை அனுப்ப முடிவு செய்தனர்.
உணவு தேடுவதில்
ஆனைமலையில் உள்ள வனத்துறை பண்ணையில் தங்க வைக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் கோழிகமுத்தியில் உள்ள யானைகள் முகாமுக்கு அந்த யானை கொண்டு செல்லப்பட்டு 3 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், ரோகினி யானை அதன் இயல்பான உணவு தேடும் முறையில் இருந்து மாறுப்பட்டு காணப்பட்டது. குறிப்பாக முகாம் வளர்ப்பு யானைகளை போன்று வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு சென்று உணவு தேடுவதில் விருப்பமின்றி காணப்பட்டது.
முகாமில் பாகன் அளிக்கும் உணவினை மட்டும் உண்ணும் நிலைக்கு பழகி இருந்தது. இதனால், காட்டுயானைகள் வளர்ப்பு முகாமில் ரோகினியை தொடர்ந்து வைத்திருப்பது உகந்தது இல்லை என்பதால், தலைமை வன உயிரின காப்பாளர் சேகர் குமார் நீராஜ் உத்தரவின் பேரில் திருச்சி எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், வனச்சரகர் காசிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கோழிகமுத்தி பயிற்சி யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து யானைகளை ஏற்றி செல்லும் பிரத்யேக வாகனத்தில் ரோகினி யானையை திருச்சிக்கு கொண்டு சென்றனர். முன்னராக, வனகால்நடை டாக்டர் சுகுமார் யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
Related Tags :
Next Story