தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
குப்பைகள் அகற்றப்படுமா?
ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டி இந்திராகாலனியில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பத்மநாபன், ஆலமரத்துப்பட்டி.
வாகன ஓட்டிகள் குழப்பம்
பெரியகுளத்தை அடுத்த கைலாசப்பட்டியில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2 அறிவிப்பு பலகைகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பலகையில் கோவிலுக்கு 6 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்றும், மற்றொரு பலகையில் 3 கிலோ மீட்டர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே சரியான அறிவிப்பு பலகையை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிபாரதி, பெரியகுளம்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டிக்கு செல்லும் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
கால்வாய் தடுப்புச்சுவர் சேதம்
தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலையோரத்தில் கல்லறைத்தோட்டம் அருகே அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாயின் தடுப்புச்சுவர் சேதமடைந்து உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே கால்வாய் தடுப்புச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஸ்கண்ணா, பழனிசெட்டிபட்டி.
எரியாத தெருவிளக்குகள்
திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறவே அச்சப்படுகின்றனர். திருட்டு பயமும் உள்ளது. எனவே தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நேசிகா, திண்டுக்கல்.

Related Tags :
Next Story