நெல் சாகுபடியில் மகசூல் பாதிப்பு


நெல் சாகுபடியில் மகசூல் பாதிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2021 10:07 PM IST (Updated: 19 Dec 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

நெல் சாகுபடியில் மகசூல் பாதிப்பு

நோய் தாக்குதலால் அமராவதி பகுதியில் நெல்சாகுபடியில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல்சாகுபடி
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாகும். அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே இரண்டு போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி பிரதான கால்வாய், அமராவதிஆறு, கிணறு, ஆழ்குழாய் கிணறு  நீரைக்கொண்டு தென்னை, வாழை, காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அணையில் இருந்து பாசனத்திற்கு சீரான முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. ஆனால் பருவநிலை மாற்றத்தால் நோய் தாக்குதல், காட்டுப்பன்றிகள் அட்டகாசம், மழையின் காரணமாக நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தது. இதனால் ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் ஆக வேண்டிய விளைச்சல்  20 மூட்டைகள் மட்டுமே கிடைத்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இழப்பீடு
நோய் தாக்குதலால் நெல் மணிகள் கருப்பு நிறத்துக்கு மாறியதால் மகசூல் குறைந்தது. எனவே சாகுபடி பணிகளில் விவசாயிகள் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபடுவதற்கு நெல் சாகுபடியில் ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story