கொல்லிமலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
கொல்லிமலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
டிரைவர்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சியில் உள்ள செல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வந்தராஜ் (வயது 31). தனியார் மில்லில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவயாணி (19). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.
இந்த நிலையில் தேவயாணிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவருடைய கணவர் செல்வந்தராஜிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்று மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேவயாணியின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story