மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ரத யாத்திரை


மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ரத யாத்திரை
x
தினத்தந்தி 19 Dec 2021 10:18 PM IST (Updated: 19 Dec 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ரத யாத்திரை

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் இந்து மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டி ராமர் ரத யாத்திரை  ராஷ்ட்ரிய இந்து மகா சபா நிறுவனர் மற்றும் மாநில தலைவர் எஸ்.வேலு ஜி தலைமையில் ராமர் ரத யாத்திரை தலைமை அலுவலகத்திலிருந்து  குமரன் குன்று அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புறப்பட்டது. ரத யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் பாரத் மாதாகி ஜே, ஜெய்ஸ்ரீராம் என்று கோஷங்களை முழங்கிக்கொண்டே வந்தனர். ரத யாத்திரை புறப்பட்டு அன்னூர் பிரதான சாலைக்கு வந்தபோது போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சிறுமுகை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ் பிரபு, லெனின் அப்பாதுரை, ராயப்பன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

 அப்போது போலீசார் மற்றும் மகா சபா நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவனர் மற்றும் மாநில தலைவர் எஸ்.வேலுஜி, மாநில செயலாளர் சக்திவேல், மாநில துணைத் தலைவர் முனியப்பன், மாநில இளைஞரணி செயலாளர் வைரமுத்து, மாநில அமைப்பாளர் சசிகுமார், மாநில துணை செயலாளர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ்ஜி,கொங்கு மண்டல செயலாளர் சங்கர், தலைவர் முத்துசாமி உள்பட 23 பேரை கைது செய்தனர்.

Next Story