ஏலகிரிமலைக்கு சுற்றுலா சென்ற ராணுவவீரர்கள் கார் மோதி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பலி
சுற்றுலா சென்ற ராணுவவீரர்கள் கார் மோதி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பலி
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 68). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் மேம்பாலத்தில் மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கலசனார் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்றுவிட்டு வந்தனர். மேம்பாலத்தில் வந்தபோது பாண்டுரங்கன் மீது கார் மோதியது.
சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு பாண்டுரங்கன் இழுத்து செல்லப்பட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டுரங்கன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த ராணுவ வீரர் விக்னேஷ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story