சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு மதுபாட்டில்களை திருடிய 3 பேர் கைது
சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு, உள்ளே புகுந்து மதுபாட்டில்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு,
3 பேர் சிக்கினர்
சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து நழுவ முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
விசாரணையில், அவர்கள் சேத்தியாத்தோப்பு அடுத்த மருவாய் கிராமத்தை சேர்ந்த ரட்சகர் மகன் கிறிஸ்துராஜ் (வயது 22), சின்னப்பன் மகன் சின்னத்தம்பி (49), ஆரோக்கியதாஸ் மகன் ஜான் போஸ்கோ (26) ஆகியோர் என்பதும, கடந்த மே மாதம் 24-ந்தேதி பின்னலூர் டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு, உள்ளே புகுந்து ரூ.97 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story