ரெயில்வே மேம்பாலத்தில் ஆய்வு


ரெயில்வே மேம்பாலத்தில்  ஆய்வு
x
தினத்தந்தி 19 Dec 2021 10:56 PM IST (Updated: 19 Dec 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே மேம்பாலத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மானாமதுரை, 
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. இதற்காக மானாமதுரையில் நான்கு வழி சாலையில் பாலம் செல்லும் பகுதியில்ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பாலத்தின் உறுதி தன்மை குறித்தும், விரிசல் குறித்தும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று
ரெயில்வே துறை சார்பாக ஆய்வு செய்யப்பட்டது. 
இதுகுறித்துரெயில்வே துறையினர் கூறியதாவது:-ரெயில்வே மேம்பாலம் சேதம் அடைந்ததாக வந்த தகவலின் அடிப் படையில் ரெயில்வே அதிகாரிகள் உத்தரவு படி ஆய்வு செய்தோம்.  மேம்பாலத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. சேதமடைந்து உள்ள பகுதிக்கும் மேம்பாலத்திற்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story